முதல் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்
அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை கொழும்பு ஹோமாகம 138 ஆம் மார்க்க இலக்க பஸ்களில்
இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்தார். மேலும் பஸ்களில் கட்டணங்களை செலுத்தும் போது பணத்திற்குப் பதிலாக
முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தும் திட்டத்தை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க
திட்டமிட்டுள்ளோம். இதற்கென சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளோம் என்றார். முதல் 6 மாதகாலத்திற்கு கொழும்பு ஹோமாகம 138 ஆம் மார்க்க இலக்க பஸ்களில் செயற்படுத்தி பின்னர்
மேல்மாகாணத்திலும் அதனை தொடர்ந்து நாடுபூராகவும் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment