Latest News

April 08, 2013

இலங்கையை ஆதரிக்கிறது இந்தியா; மனித உரிமை பாதுகாப்பு கழகம் குற்றச்சாட்டு
by admin - 0

இலங்கை வாழ் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைவாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுகந்திரமாக செய்லபடவும், கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்கள் மீது அத்துமீறி, மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமன்றி அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும், தமிழ்இன துரோகி ராஜபக்சவுக்கு துணைபோன இந்திய அரசை வன்மையாக கண்டிக்கும் வகையிலும்,

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். இலங்கைவாழ் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த மனிதநேயமற்ற ராஜபக்சவை உலக நடுவ நீதிமன்றம் மூலமாக தண்டனை வழங்க ஐ.நா.சபையை இந்த கழகம் கேட்டுக்கொள்ளும் வகையிலும்,

ஈழத்தமிழர்களின் உரிமையைக் காக்கவும், அவர்கள் சுதந்திரமாக வாழவும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்த அயல்நாடுகளுக்கு பாரத மனித உரிமை பாதுகாப்புக் கழகம் பாராட்டும் விதத்திலும்,

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்மாநில மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும், வாழ்விற்கும் மதிப்பு கொடுக்காமல் இரட்டை வேடம் போட்டு மறைமுகமாக இலங்கையை ஆதரிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிற வகையிலும் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments