Latest News

May 01, 2013

அச்சுறுத்தப்படும் உதயன் சுகிர்தன் பயமுறுத்தப்பட்டார்
by admin - 0

மோட்டார் சைக்கிளில் வந்த
இனந்தெரியாத இருவர்
தன்னை அச்சுறுத்தியதாக
யாழ். உதயன் பத்திரிகையின்
அலுவலக பணியாளர் ஒருவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார். பத்திரிகைகளை விநியோகித்து விட்டு செல்க
வைத்து இனம் தெரியாத நபர்கள் பின்
தொடர்ந்து வந்து தன்னை அச்சுறுத்தியதாக
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக
மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருவதாவது, உதயன்
பத்திரிகையினை மன்னாருக்கு விநியோகிப்பத
யாழ். உதயன் தலைமைக் காரியாலத்தில்
இருந்து வருகை தந்திருந்த அலுவலக
பணியாளரான பி.சுகிர்தன் (வயது-29)
என்பவரே இவ்வாறு அச்சறுத்தப்பட்டுள்ளார். 'கப்'ரக வாகனத்தில் உதயன் பத்திரிகைகளுடன்
மன்னாருக்கு வருகை தந்த இவர் மன்னாரில்
உதயன்
பத்திரிகையினை விநியோகித்து விட்டு மீண்ட
யாழ்ப்பாணம் நோக்கி செல்வதற்காக மன்னார்
அரச பேருந்து தரிப்பிடத்தில் கப் ரக வாகனத்துடன் நின்று கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில்,
முகத்தை மறைத்து தலைக்கவசத்தை அணிந்தவாற
நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
குறித்த பணியாளரிடம்
விசாரணைகளை மேற்கொண்டதோடு வாகனம்
மற்றும் அவருடைய அடையாள அட்டை விபரங்களை பதிந்துவிட்டு அவரையும்
கூடாத வார்த்தைகளினால்
ஏசிவிட்டு சென்றுள்ளனர். மன்னார் பிரதான பாலம் வழியாக
யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக அவர்
சென்று கொண்டிருந்தபோது குறித்த
இருவரும் அவரை சுமார் 50 மீற்றர்
தொலைவில் பின் தொடர்ந்துள்ளனர். இதனை கண்ட பணியாளர் வேகமாக
சென்று தள்ளாடி இராணுவ
முகாமிற்கு முன்பாக உள்ள இராணுவ
காவலரணுக்குள் ஓடிச் சென்று அங்கு நின்ற
இராணுவத்தினரிடம்
சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன்போது இலக்கத்தகடு இல்லாத
நிலையில் முகத்தை மறைத்துக்
கொண்டு வந்த குறித்த இரண்டு சந்தேக
நபர்களும் திரும்பிச் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்
மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம்
ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விருவரும் உடனடியாக தள்ளாடி இராணுவ
முகாமிற்கு சென்று நிர்க்கதியான நிலையில்
அங்கு நின்ற உதயன் பத்திரிகையின் அலுவலக
பணியாளரான பி.சுகிர்தனை சந்தித்து நடந்த
விடயத்தை கேட்டறிந்து கொண்டுள்ளனர். அதற்கு பின்னர் மன்னார் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும்
பணியாளரான பி.சுகிர்தன் செய்துள்ளார்.
« PREV
NEXT »

No comments