தனது ஓய்வு இல்லத்திற்கு அருகில் இருந்த விவசாயியை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, சேற்றில் சிக்கிய செம்மறி ஆட்டைக் கண்டாராம் இங்கிலாந்து பிரதமர் ஜேம்ஸ் கேமரூன்.
ஜீன்ச் பேண்ட்டும், ரப்பர் செருப்பும் அணிந்து, தனது பாதுகாவலர்கள் உதவியுடன் , சேற்றில் சிக்கிய செம்மறி ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்தாராம். அது நன்கு நனைந்த நிலையில், சேற்றில் இருந்து வெளியேற போராடிக் கொண்டிருந்தது. உடனடியாக நன்றாக சேற்றில் இறங்கிய கேமரூன், ஆட்டை காப்பாற்றி, வெளியில் விட்டாராம்.
'நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தடாலடியாக சேற்றில் இறங்கி ஆட்டைக் காப்பாற்றினார். இதனால் அவரது உடல் மற்றும் ஆடை சேறு ஆனது. ஆனால் அதைக் குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை' , என சம்பவத்தை நேரில் பார்த்த விவசாயி ஜூலியன் என்பவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment