Latest News

April 10, 2013

நான் பாட்ஷா படத்தை பார்க்க கூட இல்லை-நடிகர் விஜய்
by admin - 0

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தலைவா படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. தலைவா படத்திற்குப் பிறகு ‘ஜில்லா’ திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக விஜய் அறிவித்திருந்தாலும், ‘பாட்ஷா’ திரைப்படத்தின் ரீமேக்கில் தான் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் முழுவதும் பரவியது.



ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘பாட்ஷா’ டோலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கில் சூப்பர்ஹிட்டான பல படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார் விஜய்.

இந்த சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கிலும் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என்ற செய்தி வேகமாக பரவ, இதை அறிந்த விஜய் “நான் பாட்ஷா படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறேன் என்று வெளியாகும் செய்திகள் உண்மையானவை அல்ல.

நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். நான் பாட்ஷா படத்தை பார்க்க கூட இல்லை. இது போன்ற வதந்திகள் எங்கிருந்து உருவாகின்றன என்பது தெரியவில்லை” என்று ஆஸ்திரேலியாவிலிருந்து கூறினாராம்.
« PREV
NEXT »

No comments