Latest News

April 10, 2013

மக்கள் தமது கஷ்டங்களை இந்திய தூதுக் குழுவிடம் சொல்ல விடாது தடுத்த யாழ் முதல்வர்!
by admin - 0

இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் தமக்கு அமைத்து தரப்பட்ட வீடுகளினுள் மழைக் காலத்தில் இருக்க முடியாத அளவிற்கு ஓடுகள் உடைந்து நீர் உட் புகுவதகாவும், அவ்வேளைகளில் வீடுகளினுள் தாம் குடை பிடித்து கொண்டு இருப்பதாகவும் மக்கள் தமது குறைகளை யாழ். சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். ​

இதன்போது உங்களுக்கு எப்பவுமே எதிலுமே குறைகூறுவதே வேலை என மக்களை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தடுத்து நிறுத்தினார். ​

இன்று (10) காலை யாழ். மகேந்திரபுரம் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழவினர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். ​

இதன் போதே இந்திய வீடுதிட்டத்தின் கீழ் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக வீட்டின் உரிமையாளர்கள் இந்திய பாரளுமன்ற குழுவிடம் முறையிட்டனர். ​

இதன்போது குறுக்கிட்ட யாழ். மாநகர முதல்வர் உங்களுக்கு எப்பவும் குறை கூறுவதே வேலையாகி விட்டது. பற்றை காடுகளாக இருந்த இடங்களை சீரமைத்து, உங்களுக்கு வீடுகள் கட்டி தந்துள்ளார்கள். ​

அதற்கு ஒரு நன்றி சொல்லாமல் குறைகளை மட்டும் கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள், சில குறைகள் இருக்கதான் செய்யும். அதனை நாம் அனுசரித்து போக வேண்டும். ​

ஓடுகள் சரியாக இல்லாவிட்டால், அவற்றினை நீங்கள்தான் சீர் செய்ய வேண்டும். அவற்றினை சொல்லி கொண்டு இருக்க கூடாது என மக்கள் மீது கோவப்பட்டார். ​

அவ்வேளை முதல்வரை சமாதானப்படுத்திய யாழ். இந்திய துணைத் தூதுவர் வே.மகாலிங்கம், மக்கள் தமது குறைகளை கூறட்டும் அவர்கள் குறைகளை கேட்டறியவே நாம் வந்துள்ளோம் என கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். ​

இதன்போது மக்கள் கூறுகையில், ​

இந்தியன் வீட்டு திட்டத்தின் கீழ் எமக்கு அமைத்து தரப்பட்ட வீடுகளில் மழைகாலத்தில் உள்ளே இருக்க முடியாத அளவிற்கு ஓடுகள் உடைந்து நீர் உட் புகுவதகாவும், அவ்வேளைகளில் வீடுகளினுள் தாம் குடை பிடித்து கொண்டு இருப்பதாகவும் கூறினர். ​

வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை நில அத்திவாரங்கள் சேதமுற்று இருபதாகவும் மக்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ​
« PREV
NEXT »

No comments