Latest News

April 10, 2013

லண்டன் ஊடகவியலாளரை மிரட்டும் தொலைபேசி அழைப்புகள் !
by admin - 0

லண்டனில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசி மூலமாக ஆச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது என அறியப்படுகிறது. லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மற்றும் ஆய்வாளர்களைக் குறிவைத்தே இந்த மிரட்டல் விடப்பட்டு வருகிறது. இது இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிரைவேட் நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பை மேற்கொண்டால், அது யார் என்று தெரியாத நிலை காணப்படும். எனவே யார் என்று தெரியாவிட்டால் அந்த அழைப்பை சிலர் எடுக்கமாட்டார்கள். இதனால் பே-அஸ்-யூ கோ என்று சொல்லப்படுகின்ற , முன்கட்டன சிம் காடுகளை வாங்கி அதில் இருந்து இந்த அச்சுறுத்தல் அழைப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அழைப்பவரின் இலக்கம் தெரிவதால், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பேசும் ஊடகவியலாளரை இவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பிரித்தானியப் பொலிசாரிடமும், ஸ்காட்லன் யாட் பொலிசாரிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இருக்கும் பல ஊடகவியலாளர்களுக்கு நேற்றைய தினமும் அதற்கு முன் தினமும் இவ்வாறு தொலைபேசி அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. சில கருத்துவேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்கி, அதனூடாக ஊடகவியலாளர்களைப் பிரிக்கும் ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையாக இது நோக்கப்படுகிறது. இலங்கையில் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவைப் பிரித்து அவ்வியக்கத்தை பலமிழக்கச் செய்த கோட்டபாய போன்றவர்கள், தற்போது புலம்பெயர் நாடுகளிலும் அதே பொறிமுறைகளைக் கையாண்டு வருகிறார்கள். இங்குள்ள பல அமைப்புகள் இவ்வாறு இரண்டுபட்டு நின்று செயலிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்றதொரு நிலையை லண்டனில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தவே சிலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தொலைபேசி அச்சுறுத்தலை மேற்கொள்பவர் ஒரு பெண் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இருப்பினும் அவர் ஆணாக இருக்கலாம் என்று, நவீன கருவி ஒன்றைப் பாவித்து அவர் பெண் குரலில் கதைக்கலாம் இல்லை என்றால் அவர் தனது குரலை பெண் குரல்போல மாற்றும் வல்லமை உடையவராக இருக்கலாம் என்று பிரித்தானியப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இந்த இலக்கத்தில் இருந்தே அச்சுறுத்தல் அழைப்புகள் விடுக்கப்படுகிறது.(0744XXX6532) இது இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்கள், நேற்றைய தினம் ஒன்றுகூடி இது தொடர்பாக கலந்தாலோசித்துள்ளார்கள். ஒற்றுமையாக இருந்து இலங்கை அரசின் இச் செயல்பாட்டை முறியடிப்பது என்று அவர்கள் திடசந்தர்பம் பூண்டுள்ளார்களர். இவ்வகையான அச்சுறுத்தல்களை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதொடர்பாகவும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர்(IATAJ) ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
« PREV
NEXT »

No comments