Latest News

April 03, 2013

உலக போர் மூளும் சாத்தியம்
by admin - 1


தென்கொரியாவோடு அமெரிக்கா இணைந்து அப் பிராந்தியத்தில் போர் ஒத்திகை பயிற்சிகளை நடத்த ஆரம்பித்தது. அப்படியே பயிற்சிகளை நடத்திவிட்டுச் செல்லாமல் அமெரிக்கா வழமைபோல தனது சிலுமிஷத்தை காட்ட ஆரம்பித்தது. வடகொரியாவை அப்படியே சீண்டிப் பார்ப்பது தான் அதன் திட்டம். அமெரிக்கா தனது B52 ரக விமானங்களை வடகொரியா எல்லைக்கு சமீபமாக பறக்கவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா , அமெரிக்கா போர் கப்பல் மற்றும் தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. உலகப் போர் மூண்டுவிடும் அபாயம் இன்னமும் காணப்படும் நிலையில், சீனா தனது போர் விமானங்களை தென்கொரிய எல்லையில் பறக்கவிட்டுள்ளது. அத்துடன் நின்றுவிடாது சீனா தனது இராணுவத்தின் பாரிய படைப் பிரிவு ஒன்றை எல்லைப்புறமாக நகர்த்தியுள்ளது. சீனாவும் வடகொரியாவும் நட்ப்பு நாடுகள் ஆகும். எனவே அப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னத்தை சீனா விரும்பவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

இதேவேளை அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்று, இன்று தென்கொரியா நோக்கிச் சென்று அன் நாட்டுக்கு அருகாமையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது. இதில் தென்கொரியா ஏவும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன், தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கடற்படையின் போர் கப்பல்களின் நடமாட்டங்களும் அதிகரித்துள்ளன. சீனாவின் இன் நடவடிக்கையால் அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. வடகொரிய அமெரிக்க முறுகல் நிலைக்குள் சீனா ஏன் மூக்கை நுளைக்கவேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது ஆனால் சீனா என்ன நினைக்கிறது தெரியுமா ? அமெரிக்கா தென்கொரியாவை தாக்கினால் அப்படியே சாட்டோடு சாட்டாக இரண்டு மூன்று ஏவுகணைகளை சீனாவுக்குள்ளும் செலுத்திவிடும் என்றுதான். இதன் மூலம் அமெரிக்கா தனது ஏவுகணைகளை பரிட்ச்சித்துப் பார்க்கவும் முடியும் அல்லவா ?

ஒட்டுமொத்தத்தில் பாரிய போர் ஆரம்பமாகும் நிலை தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
« PREV
NEXT »

1 comment

Unknown said...

வடகொரிய அமெரிக்க முறுகல் நிலைக்குள் சீனா ஏன் மூக்கை நுழைக்கவேண்டும் ?