Latest News

April 03, 2013

சித்திரவதை தொடர்வதால் தப்பித்துவந்தோம் இலங்கை இளைஞர்கள்
by admin - 0

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்ரவதை தொடர்வதனால் நாம் அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பித்து வந்தோம் என்று இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வந்த 3 இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து சைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்த இலங்கையைச்சேர்ந்த இளைஞர்கள் மூவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்திதுறை வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(24), யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(26), முல்லைத் தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (19) ஆகிய மூவருமே சைபர் படகில் மன்னார் கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அருகே உள்ள கம்பிப்பாறை பகுதிக்கு நேற்று அதிகாலை வந்தடைந்தனர் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு பொலிசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை ராணுவம் தமிழர்களை பிடித்து சித்ரவதை செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க எங்கள் பெற்றோரே படகுக்கான வாடகையை கட்டி எங்களை அனுப்பி வைத்தனர். சென்னையில் நண்பர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் பிழைப்பு தேடலாம் என்று இந்தியா வந்தோம் என்று பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளர் என்றும் அந்தச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments