Latest News

April 07, 2013

உலக சுகாதார தினம் இன்று
by admin - 0

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஏப்ரல் 7ஆம் திகதி, உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

’’அதிக ரத்த அழுத்தம்’’- என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. 

ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்பிரிக் காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப் படுத்தக்கூடியது. 

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம். 
« PREV
NEXT »

No comments