Latest News

April 07, 2013

மோசமான கூட்டணி‘ என்றும் நியுயோர்க் ரைம்ஸ்
by admin - 0

சர்வதேச அளவில் ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில்
ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட
மிகவும் முக்கியமான, ஆயுத வர்த்தக
உடன்பாட்டின் மீதான
வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்தது சர்ச்ச 154 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த
உடன்பாட்டுக்கு எதிராக ஈரான், வடகொரியா,
சிரியா ஆகிய நாடுகள் வாக்களித்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிக்காமல்
புறக்கணித்த 23 நாடுகளில் இலங்கையும்
ஒன்றாகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஸ்யா,
குவைத், கட்டார் ஆகிய நாடுகளும்
வாக்கெடுப்பை புறக்கணித்தன. இந்தநிலையில், கொழும்பில் தற்போதைய
ஆட்சியை கடுமையாக விமர்சித்து வரும்
‘நியுயோர்க் ரைம்ஸ்‘, இந்த
வாக்கெடுப்பை புறக்கணித்த 23 நாடுகளில்
பல, அண்மைக்காலத்தில் மனித உரிமைகள்
விடயத்தில் மோசமான பதிவுகளைக் கொண்டிருப்பவை என்றும் விமர்சித்துள்ளது. பாஹ்ரெய்ன், மியன்மார், இலங்கை போன்ற
நாடுகளைச் சுட்டிக்காட்டி, இது ‘மோசமான
கூட்டணி‘ என்றும் ‘நியுயோர்க் ரைம்ஸ்‘
விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

« PREV
NEXT »

No comments