பொது வாக்கெடுப்பை நடாத்தக் கோரியும், தமிழக
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஈழக்
கோரிக்கைகளை இந்திய நாடாளுமன்றில்
நிறைவேற்றக் கோரியும், காங்கிரஸ் வெறியர்களின்
காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களைக் கண்டித்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின்
திருச்சி மாநகரில் உள்ள சத்திரம் பஸ் நிலையம்
அருகில் மாபெரும் மாணவர் பொதுக் கூட்டம்
ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால்
ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில்
(07/04/2013-ஞாயிறு) ஏராளமான மாணவர்கள்,
பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர்
கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பழநெடுமாறன், நல்லகண்ணு போன்ற தமிழீழ ஆதரவாளர்களும்
கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றுகின்றனர். முன்னதாக இங்கு ஈழம் தொடர்பான கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
No comments
Post a Comment