Latest News

April 04, 2013

ஆலயக்காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்தி ஆலயபரிபாலன சபையிடம் காணியை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
by admin - 0

கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர்
ஆலயக்காணி அபகரிப்பைத்
தடுத்து நிறுத்தி ஆலயபரிபாலன சபையிடம்
காணியை வழங்குமாறு பாராளுமன்ற
உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். தொண்டமான்நகர் உதிரவேங்கை வைரவர்
ஆலயத்திற்குச் சொந்தமான
காணியை தென்பகுதியைச் சேர்ந்தவர்கள்
தமது அரசியல்
அதிகாரத்தை பயன்படுத்தி அபகரிப்பது குறித்து
அதிபருக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு அவர்
அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது. “கிளிநொச்சி நகருக்கு அருகில்
தொண்டமான்நகர், கனகாம்பிகைக்குளம்,
கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள
உதிரவேங்கை வைரவர் ஆலயத்தின் தீ
மிதிப்பு உட்பட்ட திருவிழாக்கள்
நடைபெறுகின்ற ஆலயத்திற்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியை, அனுராதபுரத்தைச்
சேர்ந்த
கிளிநொச்சி மண்ணுக்கு எந்தவகையிலும்
தொடர்பில்லாத தனியார் நிறுவனம்
ஒன்று அத்து மீறிப்பிடித்துள்ளதுடன்,
காணிக்குள் அனுமதியின்றிப் பிரவேசிக்கக்கூடாது என்ற விளம்பரப்
பலகையையும் இட்டுள்ளனர். அத்துடன் ஆலய
பரிபாலன சபையையும் மிரட்டியுள்ளனர். கிளிநொச்சி மண்ணில்
பிறந்து வளர்ந்து இன்றுவரை இம்மண்ணிலேயே
என்ற வகையில்
இக்காணி முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலா
இவ்வாலயத்திற்கே சொந்தமானது என்பதை நான்
நன்கு அறிவேன். கடந்த காலங்களில் தமிழ் மக்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தம் காரணமாக
கிளிநொச்சியில் பல காணிகள் இன்னமும்
உரிய
முறைப்படி வழங்கப்படவில்லை என்பதை தாங்களும்
அறிவீர்கள். மக்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும்
உரிய காணிகள்
தென்பகுதியிலிருந்து வருபவர்களால் சட்ட
விரோதமாகப் பறிக்கப்படுவதும் அதற்கு சில
தமிழ் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும்
வேதனையளிக்கிறது. இக்காணி விடயம் தொடர்பாக 2013.03.18ம்
திகதி கரைச்சிப் பிரதேச செயலருக்கு கடிதம்
ஒன்று எழுதி தங்களுக்கும்
பிரதி இட்டிருந்தேன். இதுவரை பிரதேச செயலரிடமிருந்தோ,
தங்களிடமிருந்தோ எதுவித பதிலும்
எனக்குக் கிடைக்கவில்லை. இக்காணி விடயம்
தொடர்பாக கரைச்சி பிரதேச செயலாளரினால்
KR/LB/LL/UVT-/251/01ம் இலக்க
2010.12.21ம் திகதி ஆலய பரிபாலனசபைக்கு கடிதம்
ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வடமாகாண காணி ஆணையாளராலும்
NP/28/04/02/05/45/C(111)ம் இலக்க
2011.03.14ம் திகதிய கடிதம் மூலம்
இக்காணியை ஆலயபரிபாலன சபையிடம்
ஒப்படைக்குமாறு பிரதேச செயலருக்கு கடிதம்
மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோவை இலக்கம் KR/LB/LL/UVT-
K251 உம், நிலஅளவைக் கோரிக்கை இலக்கம்
KR/LB/SUR/2011/47 உம், காணி அளத்தலின்
தொடர்பு FTP-1,INSET22,LOT 915
கொண்ட கரைச்சி உதவி அரசாங்க அதிபரின்
2011.05.30ம் திகதிய விபரமும் ஆலய பரிபாலனசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு விடயங்களையும்
மீறி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு
சொந்தமான இக்காணியை அத்துமீறிப்
பிடிப்பது என்பது எந்தவகையில்
நியாயமானது என்பதை எனக்கு அறியத்தருவதுட
தாங்கள் உடனடியாகச் செயற்பட்டு, இக்காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தி ஆலயப
சபையிடம்
காணியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்
கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments