இராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 590
விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான
அனுமதி பெற்றிருந்தனர். ஆனால்,
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும்
போதிய மீன்வரத்து இல்லாததால் 150க்கும்
குறைவான படகுகளே மீன்பிடிக்க சென்றன. இவர்கள்
நேற்று மாலை கச்சதீவு அருகே மீன்பிடிக்க
செல்ல முற்பட்டபோது,
படகுகளை இலங்கை கடற்படையினர்
வழிமறித்து கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க
கூடாது என விரட்டியடித்தனர். மேலும் சில மீனவர்களின் படகுகளில் இருந்து கடலில்
பாய்ச்சியிருந்த வலைகளையும்
அறுத்துவிட்டனர். இதனால் தொடர்ந்து அவர்கள் மீன்பிடிக்க
முடியவில்லை. வலைகள் சேதப்படுத்தபட்டதால்
இந்திய கடல் பகுதிகளிலும் மீன்பிடிக்க
முடியவில்லை. வரும் 15ம் தேதி முதல்
மீன்பிடி தடை காலம் தொடங்க உள்ளது. இதற்கு இடைப்பட்டு இன்னும் 4 நாட்கள்
மட்டுமே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க
செல்ல முடியும். இதனால் இடைப்பட்ட
நாட்களில் மட்டுமாவது நிம்மதியாக
மீன்பிடிக்கலாம் என
நினைத்து கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொடர்ந்து நஷ்டமே
No comments
Post a Comment