Latest News

April 04, 2013

பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி, தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக தமிழக மாணவர்களின் எழுச்சி காணப்படுகின்றது!- காசி ஆனந்தன், பழ.நெடுமாறன்
by admin - 0

இலங்கையில் 65 வருடகால
இன
அழிப்புக்கு நீதி வழங்கும்
வகையில் ஐ.நா சர்வதேச
சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி, தமிழக
மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில்
மாபெரும் ஆர்ப்பாட்ட
பேரணி இடம்பெறவுள்ளது. இம் மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணியில்
கலந்து கொள்ளுமாறு உணர்ச்சிக் கவிஞர்
காசி ஆனந்தன், மற்றும் பழ.நெடுமாறன்
ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக காசி ஆனந்தன்
கருத்து வெளியிடுகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
ஒரு கொதிப்பான காலத்தில் குமுறலான
காலத்தில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் நிகழ்ந்த பொழுது எல்லாம்
முடிந்து விட்டது என்று முனகியவர்கள் இருக்கின்றனார்கள். ஆனால் அது முடிவல்ல
ஒரு திருப்பம் என்று நாங்கள் நினைத்தோம். இன்று ஐந்து ஆண்டுகளாக
எரிந்து கொண்டிருக்கின்ற நிலையில்,
உலகெங்கிலும் கொதித்தெழுந்திருக்கும்
உணர்ச்சி அலைகளைப் பார்க்கின்ற
பொழுது முள்ளிவாய்கால் முடிவல்ல
என்பது தெட்டதெளிவாகத் தெரிகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள்
உணர்ச்சி வசப்பட்டுப் போய் இருக்கிறார்கள்.
குறிப்பாக அண்மையில் ஐ.நா மனித உரிமைகள்
ஆணையத்தில் அமெரிக்காவினால்
கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
அந்த நாளையொட்டிய காலகட்டத்தில், பாலச்சந்திரனுடைய அந்த கொடுமையாக
கடைசி நொடிப்பாழுதும் புகைப்படம் மக்கள்
முன் வைத்த நேரத்தில் உலகமெங்கும்
வெடித்தெழுந்ததை நாம் பார்த்தோம். குறிப்பாக தமிழ் நாட்டில் மாணவர்களுடைய
பேரெழுச்சி என்பது தமிழீழ விடுதலைப்
போராட்டத்தில் ஒரு பகுதியாக
அமைந்ததையும்,
அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பதையும் நாம்
மறந்து விடுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக
மாணவர்களின் எழுச்சி, ஓரிரு கல்லூரிகள்
மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக்
கூடங்களும் பேரெழுச்சியாக வெடித்ததை நாம்
பார்க்கிறோம். யாழில், 1920 , 26 களில் மாணவர்கள் சங்கங்கள்
ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கிடையிடையே மாணவர்கள் எழுந்தார்கள்.
1958இல் தந்தை செல்வா காலத்தில்
அறப்போராட்டம் நடைபெற்ற காலத்தில்
யாழ்ப்பாணத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் எழுந்தார்கள். மாணவர்கள் ஈழ விடுதலைப்
போராட்டத்தில் பெரும்
பங்காற்றி வருகின்றனர். எனவே லண்டன் வாழ் தமிழ்மக்கள்
உணர்ச்சியோடு இந்தப் பேரணியில்
கலந்துகொள்ள வேண்டும் என காசி ஆனந்தன்
தெரிவித்துள்ளார். பழ.நெடுமாறன் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக மாணவர்கள் யாருடைய தூண்டுதலும்
இல்லாமல் மிகுந்த தன்னெழுச்சியுடன், தமிழீழ
போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போர்க்குறற்றவாளிகளை சர்வதேச
நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல
முக்கியமான கோரிக்கைகளை முன்னிறுத்தி,
அவர்கள் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய
இந்தப் போராட்டம்
என்பது அவர்களாகவே திட்டமிட்டு நடத்துகிறா தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவ
என மாணவரக்ள் உரத்தகுரலில்
முழக்கமிட்டு வருகிறர்கள். மாணவர்களின் எழுச்சி மிக்க இந்தப்
போராட்டத்தில் தமிழகத்தில்
பல்வேறு துறையினரும் மாணவர்களின்
போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில்
குதித்து, இன்று தமிழகமே போர்க்களமாக
திகழ்கிறது. எனவே உலகத்தமிழர்களும் மாணவர்களின்
இந்தப்போராட்டத்திற்கு உற்சாகமும்
உந்துதலும் வழங்கவேண்டுமென கேட்டுக்
கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments