Latest News

April 20, 2013

அன்னை ஜெயலிதாவை கேவலமாக சித்தரிக்கும் சிங்களம்- ஆத்திரத்தில் தமிழகம்
by admin - 0

தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீபகாலமாக இலங்கை ஊடகங்களும்
சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் இலங்​கைக்குக்கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி,மாணவர்போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறை​வேற்றப்பட்ட தீர்மானம்,ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு,
கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத்
தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத் தன்
கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர்
ஜெயலலிதாவை, சிங்கள மற்றும் ஆங்கில
ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி கேலிச்சித்திரம் வரைவதும்
கோபக் கட்டுரைகள்
தீட்டுவதுமே முழு நேரத்
தொழிலாகக்கொண்டுள்ளன'' என்கிறார்
கொழும்புவில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்
ஒருவர். இலங்கை விவகாரத்தில்
ஜெயலலிதா தொடர்ந்து தீவிரம் காட்டுவதால்,
இங்குள்ள புத்த பிக்குகள்
கொதிப்படைந்துள்ளனர். குறிப்பாகத்
தமிழகத்தில் புத்த பிக்குகளும் புத்த
விகாரைகளும் சிங்கள மக்களும் தாக்கப்பட்டதால் அவர்கள் மத்தியில் பெரும்
ஆத்திரம். இதனால், தினமும்
ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை​
விடுவதும் போராட்​டம் நடத்துமாக
செய்திகளை ஆக்கிரமிக்​கிறார்கள். கிரிக்கெட் என்பது விளையாட்டு. அதில்
தலையிட ஜெயலலிதாவுக்கு அதிகாரம்
இல்லை. ஐ.பி.எல். நிர்வாகமும் குறிப்பிட்ட
அணியின் முதலாளி​களும்​தான் 'யார்
விளையாட​ வேண்டும், யார் விளையாடக்
கூடாது’ என முடிவெடுக்க வேண்டும். தேவை​யில்லாமல் ஜெயலலிதா தலை​யிட்டால்,
இந்தியா​வுடனான எமது வெளியுறவுக்
கொள் கைகள் பாதிக்கப்​​படும். 'அடோ...
ஜெயா’யிஸத்தை ஒருபோதும்
பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ எனப்
பகிரங்கமாகவே 'திவயின’ என்ற சிங்களப் பத்திரிகை கட்டுரை எழுதி, கார்ட்டூனும்
போட்டது. கடந்த அக்டோபரில் மன்மோகன் சிங்கையும்
ஜெயலலிதாவையும் வக்கிரமாகக்
கேலிச்சித்திரம் போட்ட 'லங்கா பீம’ என்ற
சிங்களப் பத்திரிகை இந்த முறையும்
கார்ட்டூன் போட்டது. மேலும் 'லங்கா தீப’
என்ற பத்திரிகை, 'விளையாட்டு என்பது மனித சமூகத்தை ஒன்றிணைப்பது. அதை எதிர்க்கிற
ஜெயலலிதா ஒரு மனிதரா?’ என
கேள்வி எழுப்பிக் கட்டுரை தீட்டியது''
என்கிறார் கொழும்பில் உள்ள மூத்த ஆங்கில
பத்திரிகையாளர் ஒருவர். இனவாதம் மிகுந்த சிங்களப் பத்திரிகைகள்தான்
ஜெயலலிதாவை விமர்சிக்கிறது என்றால்
'சண்டே அப்சர்வர்’ என்ற ஆங்கிலப்
பத்திரிகை ஐ.பி.எல். போட்டிகள்
குறித்து 'தி ஹிந்து’
ஜெயலலிதாவை விமர்சித்து எழுதிய தலையங்கத்தை அப்படியே பிரசுரம் செய்து,
அதற்கு இங்குள்ள புத்த பிக்குகள் மற்றும்
இனவாதிகளிடம்
கமென்ட்டுகளை வாங்கி வெளியிட்டது. மேலும் இலங்கை அமைச்சர் சூரிய பெரும,
'மன்மோகன் சிங் ஒரு தவளை.
இலங்கையை எதிர்க்கும் அந்தத் தவளையின்
ஆட்சி சீக்கிரமே தவிடுபொடியாகும்’ என
பேட்டியளித்ததை அப்படியே பிரசுரம் செய்தது.
அதேபோல 'மாணவர்களுடைய போராட்டத்தைத்
தூண்டிவிடுவது ஜெயலலிதாவும்
வெளிநாடுகளில் இருக்கிற விடுதலைப்
புலிகளின் ஆதரவாளர்களும்தான். 30
ஆண்டு கால யுத்தம்
முடிவடைந்து அமைதி நிலவும் இலங்கையை ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய
முடியாது. அவர் அரசியலுக்குப் போடும்
வேடமெல்லாம், ஒருநாள் அம்பலமாகும்’ என
பொதுபல சேனா என்ற அமைப்பு வெளியிடும்
அறிக்கைகளை 'டெய்லி மிரர்’ என்ற ஆங்கிலப்
பத்திரிகை தொடர்ந்து வெளியிடுகிறது. மொத்தத்தில், இலங்கையில் உள்ள சில
சிங்கள, ஆங்கில, தமிழ் ஊடகங்கள்
ஜெயலலிதாவையும் மாணவர் போராட்​
டத்தையும் குறிவைத்து விமர்சிக்கின்றன.
''இவற்றுக்கு கோத்தபய ராஜபக்சேவின்
நிழலில் செயல்படும் 'பொதுபல சேனா’ போன்ற இனவாத அமைப்புகள் எலும்புத்
துண்டுகளை வீசுகின்றன. இது ஒருவிதத்தில்
இங்குள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும்
அரசாங்கமே விடுக்கிற அபாய எச்சரிக்கை''
என்றார் மட்டகளப்பில் இருக்கும் ஒரு தமிழ்
பத்திரிகையாளர். இந்த நிலையில் ராவணா முக்தி என்ற
அமைப்பு கடந்த வாரம் கொழும்பில் பெரிய
ஆர்ப்பாட்டம் நடத்தி,
''இலங்கை அரசுக்கு எதிராகப் போராட்டம்
நடத்திய தமிழ் நடிகர்​களைப் புறக்கணிக்க
வேண்டும். விடுதலைப் புலிகளின் நண்பர்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களை இலங்கையில்
திரையிடக் கூடாது. அதற்குப் பதிலாக
மலையாளப் படங்களையும் இந்திப்
படங்களையும் இறக்குமதி செய்ய வேண்டும்’
என இலங்கைத் திரைப்படக்
கூட்டு ஸ்தாபனத்தில் மனு ஒன்றையும் அளித்தது. சிவாஜியுடன் 'பைலட் பிரேம்நாத்’
படத்தில் ஜோடியாக நடித்த
மாலினி பொன்சேகா, 'தமிழ் திரைப்
படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என
உண்ணாவிரதப்
போராட்டத்தை அறிவித்திருக்கிறார். நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது!

« PREV
NEXT »

No comments