Latest News

April 20, 2013

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது பட்டமளிப்பு விழா அங்கேயும் இராணுவ பிரசனம் ஆதாரம் இணைப்பு
by admin - 0


கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது வைத்தியத்துறை பட்டமளிப்பு வைபவம் இன்று வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2010ம் மற்றும் 2011ம் ஆகிய ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்த பல துறைகளையும் சார்ந்த 992 பட்டதாரிகள் இன்றும் நாளையும் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது பட்டம் பெறவுள்ளனர்.

இதில் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவபீடத்தில் கல்விகற்று வெளியேறிய 27 வைத்தியத்துறை சார்ந்தவர்களுக்கு (எம்.பி.பி.எஸ்.) இன்று பட்டங்கள் வழங்கப்பட்டன.

கிழக்குப் பல்கலைக்கழக வராலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாட்கள் 5 தொகுதிகளாக இந்த பட்டமளிப்பு வைபவம் நடைபெறுகின்றது.

இந்த பட்டமளிப்பு வைபவத்தின் போது கௌரவ கலாநிதி பட்டம் கிழக்குப் பலக்லைக்கழக ஸ்த்தாபகரான முன்னாள் அமைச்சர் அமரர் கே.டபிள்யு.தேவநாயகம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இன்று 580 பட்டதாரிகளுக்கும், நாளை ஞாயிற்றுக்கிழமை 412 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற பட்டமளிப்பு விழா ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராக உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க மற்றும் சிறப்பு விருந்தினராக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிடத்தினை சேர்ந்த கலாநிதி காமினி சமரநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »

No comments