Latest News

April 19, 2013

பாஸ்டன் சந்தேக நபர்களில் ஒருவர் சுட்டுக்கொலை; மற்றவரைத் தேடி போலிஸ் வலை
by admin - 0

அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை, மஸாச்சூசெட்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பட்டிருந்தாக காவல்துறை கூறுகிறது.
சந்தேகநபர்கள் துப்பாக்கிமுனையில், காரொன்றை உரிமையாளருடன் சேர்த்து கடத்திச் சென்றிருந்தனர்.
பின்னர், அவர்கள் கார் உரிமையாளரை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன்னதாக அவர்கள் போலிசாருடன் துப்பாக்கிச் சண்டடையில் ஈடுபட்டதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பின்னர், அவர்களைத் துரத்திச் சென்று சுட்டதிலேயே சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சண்டையில் மோசமாக காயமடைந்துள்ளார்.
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பிலான படங்களில் வெள்ளைத் தொப்பி அணிந்திருந்த, இரண்டாவது முக்கிய சந்தேகநபரையே தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments