இந்தியாவிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்று தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் இன்று நடத்தப்பட்டதாகவும், அந்த செவ்வியில் நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும்,

இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கருத்துக்கள் சொல்லப்பட்டதாகவும், சீ.ஜ.டி யினர் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த விசாரணைக்கு வருமாறு எனக்கு 12ம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது, எனினும் நான் இன்றே விசாரணைக்குச் சென்றிருந்தேன்.
இதன்போது இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக அவர்கள் என்னிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர்.
ஆனால் அந்த செவ்வியில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்த விடயங்கள் மற்றபடி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும், இராணுவ இரகசியங்கள் தொடர்பாகவும் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமில்லை, அவசியமும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில் இந்த விசாரணையின் நோக்கம் அரசியல் எங்கள் குரல் அழுத்தமாக வந்து விடக்கூடாது, எங்கள் வாய்களை மூடவேண்டும் என்ற இனவாத சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் பாராளுமன்ற உருப்பினருக்க் இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண கூடி மகனின் நிலைமை
இராணுவம் தொடர்பில் கருத்து தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமை: சுரேஷ் பிரேமசந்திரன்
இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கொழும்பு 4ஆம் மாடியில் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்று தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.
அந்த செவ்வியில் நாட்டின் பாதுகாப்பிற்கும் இராணுவத்தின் இரகசியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த விசாரணைக்கு வருமாறு எனக்கு 12ம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் நான் இன்றே விசாரணைக்குச் சென்றிருந்தேன்.
யாழ்ப்பாணம் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கடமையில் உள்ளனர் என நான் அந்த செவ்வியில் தெரிவித்திருந்த விடயங்கள் ஏற்கனவே பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தன. இருப்பினும் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் நான் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஆனால் நான் அவ்வாறு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments
Post a Comment