தொடர்பில் சர்வதேச
விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று பிரித்தானியா அரசாங்கம் மீண்டும்
வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும்
பொதுநலவாய நாடுகளுக்கான செயலாளர்
அலஸ்டயார் பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள்
இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே இறுதி யுத்தத்தில் இடம்பெற்
வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்த
வேண்டும் என்று, இரண்டு தடவைகள்
ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள்
பேரவை தீர்மானங்களை நிறைவேற்றி இருந்த
போதும், இலங்கையில் அது நடைமுறையாக்கப்படவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக
அமுலாக்கப்படவில்லை. இந்த நிலையில் இலங்கையில் சர்வதேச
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments
Post a Comment