சட்டப் பேரவையில் முதலமைச்சர்
ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள்
இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா,
பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்
கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இலங்கை நட்பு நாடு என்ற
வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும்
கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சம
நீதி கிடைக்க தமிழக
அரசு முயற்சி செய்து வருகிறது என
தெரிவித்தார். இதேவேளை, இலங்கை அரசுக்கு எதிரான
போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்
என்றும், கல்விக்கு முக்கியத்துவம்
அளித்து கவனம் செலுத்தும் வகையில்
போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும்
முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
No comments
Post a Comment