
உண்மையிலேயே பிரபாகரன் சரணடைய நினைத்திருந்தால் சரணடைய சந்தர்ப்பம் இருந்தும் அவர் சரணடைவு என்ற ஒரு சிந்தனையே இன்றி போரிட்டு கொண்டே இருந்தார். அப்படி அவர் சரணடைந்திருந்தால் அவர் இன்று ஒரு அமைச்சராக இருந்திருப்பார் ஆனால் அவர் முடிந்தவரை போராடவே முடிவெடுத்திருந்தார்.விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளாக இருந்தாலும் பிரபாகரனின் சரணடையாமல் போராடவேண்டும் என்ற வீரத்தை தான் மதிப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.நந்திகடலில் நடந்த சண்டையில் சரணடைய வேண்டாம் என்று ஒரு உரத்த குரல் கேட்டதாகவும் அந்த குரல் பிரபாகரன் அவர்களின் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்றும் அந்த சண்டையில் இருந்த தமிழ் தெரிந்த அதிகாரி தெரிவித்ததாக அவர்மேலும் தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடனே நாங்கள் போரில் வேற்றிகொண்டோம் என்றும் இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டார்.
.jpg)
No comments
Post a Comment