Latest News

March 25, 2013

சென்னையிலேயே தூதரகம் – சிறிலங்கா அறிவிப்பு
by admin - 0

சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்றுவது குறித்து சிறிலங்கா ஆலோசித்து வருவதாக, வெளியான செய்திகளில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments