விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல
கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன்
குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின்
அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில்
இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக
நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக்
கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த
அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்கள
ை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள்
தமிழகமெங்கும் உள்ள சன் குழும
அலுவலகங்களை முற்றுகையிடுவதாக
தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில
கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் ௧. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக
இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய
இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் . ௨. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள
இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும் ௩. இலங்கை மீது பொருளாதாரத்
தடையை கொண்டு வர வேண்டும் . ௪. தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா ,
இலங்கையில் நடக்கும் பொதுநலவாய
மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் . ௫. ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச
இனப்படுகொலை விசாரணை மற்றும்
பொது வாக்கெடுப்பிற்க
ு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் . ௬. இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும்
இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ ,
கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள
வேண்டும் .
இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர்
போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த
வேண்டும் . ௮. பாகிஸ்தான் உடனாக
விளையாட்டு உறவை முறித்து போல்
இலங்கை உடனாட விளையாட்டு உறவையும்
முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும்
இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக்
கூடாது . இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள்
இந்திய அரசுக்கு முன்வைத்தனர்
No comments
Post a Comment