Latest News

March 28, 2013

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இயக்கப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை
by admin - 0

நீண்ட காலமாக குறித்த
விடுதியை யாழ்.மாநகர
சபை மற்றும் யாழ்.பிரதேச
சபையின் அதிகாரிகளினால்
முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதியானது சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அமைப்பாளார் லது என்ற பெண்மணியே இதன் உரிமையாளர் என தெரியவருகின்றது. குறித்த விடுதி யாழ்.மாநகர சபையினால் சீல்
வைக்கப்பட்டுள்ளது. (இரண்டாம் இணைப்பு) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இயக்கப்பட்ட
விபச்சார விடுதியில் யாழில் பிடிக்கப்பட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால்
இயக்கப்பட்டு வந்த யாழ்.மாவட்ட
செயலகத்திற்கு அருகில் சட்டவிரோதமான
முறையில் இயங்கிய வந்த விபச்சார
விடுதியென்று இன்று பிற்பகல்
மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக
அமைப்பாளர் எஸ். நிசாஷந்தனின்
ஒழுங்கமைப்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர்
மற்றும் யாழ்.பிரதேச செயலாளர் ஆகியோர்
ஊடகவியலாளர்களுடன்
விடுதியினை ஆதாரத்துடன் முற்றுகையிட்டனர். இவ்விடுதியானது ஈ.பி.டி.பி ஆதரவுடன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள்
அமைப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடுதியானது பிடிக்கப்படும்
போது குறித்த விடுதியில் 5 இற்கும்
அதிகமான பெண்கள், இனந்தெரியாத
ஆண்களுடன் தங்கியிருந்தனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு வேலை பெற்றுத் தருவதாகக்
கூறி அவர்களை வைத்து இவ்விடுதியானது இய
ஆரம்ப கட்ட விசாரணைகளில்
இருந்து தெரியவருகின்றது. முற்றுகையின் போது யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள்
விடுதியில் பிடிக்கப்பட்டனர். விடுதியினை பிடித்த
போது பொலிஸாருக்கு பிரதேச
செயலாளரும் மாநகர ஆணையாளரும் பல
முறை தகவல் சொன்ன போதும் சம்பவ
இடத்திற்கு பொலிஸார்
இறுதி வரை சமூகமளிக்கவில்லை. ஆனால் விடுதி பிடிக்கப்பட்டதும் சம்பவ
இடத்திற்கு இராணுவப் புலனாய்வாளர்கள்
விரைந்து வந்தனர். விடுதிக்கு முன்னர் ஈ.பி.டி.பி யின்
மகேஸ்வரி நிதியமும், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் அங்கஜனின் அலுவலகமும் உள்ளது. விடுதியில் பிடிக்கப்பட்ட பெண்களும்
ஆண்களும் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்ட
நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஏற்கனவே சுமங்கலி என்ற விபச்சார
விடுதி முன்னர் பிடிக்கப்பட்டதும்
இங்கு குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments