மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
March 28, 2013
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா
by
admin
09:22:00
-
0
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக , இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது. சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது. தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன்என்றார். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும்
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment