Latest News

March 29, 2013

ஆபத்தான சிங்கள காடையன் இவர்தான்- இலங்கை செல்லும்போது அவதானம்
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த 21ஆம் திகதி இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அச்சபையில் சமூகமளித்திருந்த தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கையிலிருந்து வருகை தந்த திவயின பத்திரிகையின் செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய என்பவர் நடந்து கொண்டார் என அறியப்படுகிறது. மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தமிழர் மனித உரிமை செயற்பாட்டாளர் சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களை படம் பிடித்த கீர்த்தி வர்ணகுலசூரிய அவர்களை அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டார். அதேபோல இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் கனடா பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆகியோரையும் திவயின பத்திரிகை செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய படம் பிடித்து கொண்டார். மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ புலிகளுடன் சேர்ந்து செயற்படுகிறார் என ஏற்கனவே குற்றம் சாட்டி வந்த இந்நபர் தற்போது தமிழர் மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது படம் பிடித்து நிமல்காவிற்கு உயர்அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை எழுதும் தீய நோக்கோடு இச்செயலை செய்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக மிக மோசமாக இனத்துவேச நோக்கோடு திவயின பத்திரிகையில் கீர்த்தி வர்ணகுலசூரிய என்பவரே தொடர்ச்சியாக செய்திகளை எழுதி வருகிறார். சுத்திச் சுத்தி படம் எடுத்த இன் நபர், கோட்டபாயவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்

« PREV
NEXT »

No comments