Latest News

March 24, 2013

தனித்து குரல் கொடுப்பதை விட்டு இப்போதுள்ள காலக்கனதியை புரிந்து கொண்டு முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் ஒன்றிணைந்து இந்த பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும்
by admin - 0

இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் கிட்டத்தட்ட
இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து முள்ளிவாய்க்கால்
பேரவலத்தை எதிர்கொண்டு இன்றும் தொடர்ச்சியான
அடக்குமுறைக்குள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தமிழ்
மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனாலும் உரிமைக்கான எமது குரல் இன்னமும்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள், பிரகடனப்படுத்தப்படாத
இராணுவ ஆட்சி, சிவில் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்,
ஆட்கடத்தல்,தொழில் வாய்ப்பில் பாரபட்சம்,கலாசார, புனித மையங்கள் சிங்கள
மயப்படல்,தமிழரின் வரலாற்று எச்சங்கள், தொடர்புகள், சான்றாதாரங்கள், சிங்கள
மயப்படுகின்றன. வரலாற்று மையங்களை அரசு பாதுகாக்கின்றது என்ற பெயரில் பல
ஆயிரம் ஏக்கர்கள் தமிழர் நிலம் அரசுடமையாகக்ப்படுகிறது, வாழ்க்கைதரம் பொருளாதாரம் கலாச்சாரம் என்பவற்றின் திட்டமிட்டசீரழிப்பு என்று இன்னோரன்ன
கொடுமைகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள்
ஆயுதம் ஏந்தியதற்கான காரணம் இதுவரை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு இனத்தினுடைய நிலைத்திருப்புக்கு அதன் மொழியும் பண்பாடும்
அடிப்படையாக அமைகின்றது.யூதர்கள் நாடற்றோர் ஆக்கப்பட்டபோது அவர்கள் தாம்
கற்பதற்கு ஓர் இடமே உலகத்திடம் கேட்டார்கள், அங்கே கல்வியையும்,
தத்துவத்தையும் தமது தொழில்நுற்பத்தையும், பண்பாட்டையும் இரகசியமான
முறையில் தமது குழந்தைகளுக்கு புகட்டினார்கள். அதுவே அந்த இனம்
அழிவடையாது இஸ்ரவேல் என்னும் தேசம் உருவாக அடிப்படையை அமைந்தது. இவ்வாறான ஒரு கடமையே
ஒவ்வொருவரிடமும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. எம் இனத்தின்
நிலைத்திருப்புக்கு மொழியையும் பண்பாட்டையும் பாரம்பரியங்களையும்
பாதுகாப்பதோடு அதனை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டிய தார்மீக பொறுப்பு
ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாயக விடுதலைக்கான அகிம்சைப்போரட்டத்தை தாய்த்தமிழக உறவுகள்
தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். எழுச்சி கொண்டுள்ள தமிழக மாணவர்
போராட்டம் தமிழீழ ஆத்மாவை உயிர்த்தெழ வைத்துள்ளதோடு,
விடுதலைப்போராட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. சின்னஞ்சிறு மாணவன்
தொடங்கி பட்டதாரி, எழுந்து நடக்கமுடியாத
பாட்டி வரை போராடத்தொடங்கிவிட்டனர். இச்சூழல் இழந்த எம் தேசத்தை பெறுவதற்கான பயணத்தை மீழ ஆரம்பித்துள்ளது. தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து அரச பயங்கரவாதியான இலங்கையால் உயிர்
அச்சுறுத்தலுக்கு உள்ளான பல யாழ் பலகலை மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள்,
மாணவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள் நீங்கள் ஒரு குடையின் கீழ்
ஒன்றுபடவேண்டும். தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கான பலமான குரலாக
உங்களால் இருக்க முடியும். தொடர்ந்துகொண்டுள்ள இந்த மாணவர்
எழுச்சி போராட்டத்தில் ஈழத்தாய் உங்களின் பங்கை எதிர்பார்த்து நிற்கிறாள். இன்றைய சூழலில் ஈழத்து உறவுகளால் எதுவும் செய்ய முடியாத
நிலை காணப்படுகின்றது. உச்ச கட்ட அடக்குமுறைக்குள் இருந்து அவர்களால்
எதுவும் செய்ய முடியாது இது புலம்பெயர் மாணவ உறவுகளால் நன்கு உணரப்பட்ட
விடயமே. எழுச்சி கொண்டுள்ள தமிழக உறவுகளின் போராட்டத்தில்
கைகோர்த்து இலட்சியத்தை அடைவதற்கான கோரிக்கைகளை வலுவடைய
செய்வதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டியது உங்களின் காலத்தின் கடமையாக இருக்கிறது. ஒருவட்டத்துக்குள் இருந்த தேசிய போராட்டத்தை அனைத்து தமிழ்மக்களையும்
ஒன்றுபடுத்தி தேசிய விடுதலை என்னும் ஒரே நீரோட்டத்துள்
கொண்டுவந்து மக்களை அணிதிரட்டி பொங்குதமிழ் மூலம் தமிழர்
பிரச்சினையை உலக அளவிற்கு கொண்டு சென்ற சக்தி மிக்க செயலை செய்த நீங்கள்
இன்று முகவரி இல்லாமல் இருப்பது. ஈழ விடுதலைப்போராட்டத்தில்
வரலாற்று கடமையை செய்ய தவறும் ஒரு விடயமாகவே பார்க்க தோன்கிறது. பல்வேறு பட்ட தியாகங்களையும் இழப்புக்களையும் இன்னல்களையும் தாண்டி யாழ்
பலகலைக்கழக மாணவர் சமுகம் தமிழ் மக்களின் முதுகெலும்பாகவும் அவர்களின்
உரிமைக்குரலாகவும் ஒலித்து வருகின்றது இலங்கை வரும் எந்த வெளிநாட்டு ராஜ
தந்திரியும் ஏனைய பல்கலை மாணவர் சமூகங்களை சந்திப்பது இல்லை ஆனால் யாழ்
வரும் எந்த ராஜ தந்திரியும் யாழ் பல்கலை மாணவர் சமுகத்தை
சந்திக்காது செல்வதில்லை.இது யாழ் பலகலை மாணவர் சமுகத்துக்கு சர்வதேசம் வழங்கி உள்ள ஓர் சிறப்பான அங்கீகாரமாகும். புலம்பெயர் தேசங்களில் உள்ள அநேக
மாணவர்கள் மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களாக
இருந்தவர்களே உங்களுக்கென்று ஒரு அறிமுகம் இந்த சமுகத்தில் இருக்கிறது ஆக
நீங்கள் நினைத்தால் எழுச்சி கொண்டுள்ள இந்தப்போராட்டத்தை இன்னும்
வேகமாக்கி வினைத்திறனுடையதாக மாற்றலாம் பல்கலையில் தமிழர் உரிமை பற்றி பேசும் மாணவர்கள் வெளியேறியதும்
முகவரியற்று போய்விடுகிறார்கள் என்ற விமர்சனம் வைக்கப்படுகின்றது.
இதற்கு அடிப்படை முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட வெகுசன
அமைப்பு ஒன்று இல்லாமையே காரணமாகும். இதுவரைகாலம் பதவி ஆசை. அரசியல்
வேறுபாடு என்று அடிபட்டு பழைய மாணவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க
திராணியற்று இருப்பது வேதனைக்குரியதே. அரசியல் அனாதைகலாக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வாளர்களால் கூறப்படும் எம்
இனத்தின் விடுதலைக்காக ஆக்கபூர்வமான அறிவுபூர்வமான
செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது.
பல இலட்சம் மக்கள் மாண்ட பின்பும் இதுவரை எம் இனம்
பக்குவப்படவில்லை என்றே என்ன தோன்றுகின்றது எமக்குள்ளேயே நாம்
அடிபட்டு காலத்தையும் சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட்டுகொண்டிருக்கிறோம் .முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்
இன்று தமிழருக்கான சர்வதேச அரசியல் களம் அகல திறக்கப்பட்டுள்ளது.
அதனை தமிழ் தலைமைகள் சரிவர பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்.அதற்கு எம்மக்களிடையே ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் ஈழத்தில்
தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைக்க
வேண்டும்.அதே போல் புலம்பெயர் தேசத்தில் சிதறிக்கிடக்கும் எமது உறவுகளையும் ஒன்றிணைத்து புலத்திற்கும் புலம்பெயர் தேச மக்களுக்கும்
இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவேண்டும் .இதனால் எமது உரிமைக்குரல்
வலுப்பெறும். இதற்கான நடவடிக்கைகளை பழைய மாணவர்கள் தொடங்க வேண்டும். மாறிவரும் சர்வதேச புவிசார் அரசியல் எமக்கான அரசியல்
களத்தை தந்திருந்தாலும்கூட சர்வதேச அரசியல் செயற்பாடுகள் எமது இலக்கான
தமிழீழத்தை அடைவதுக்கு நீண்டதூரம் பயணிக்கவேண்டும்
என்பதை நிருபித்து வருகின்றது. இதற்கு சமகால ஜெனீவா சிறந்த எடுத்துக்காட்டாக
அமைகின்றது. பயணத்தின் வேகத்தை அதிகரிப்பதன் ஊடாகநீண்ட தூர
பயணத்தை விரைவாக அடைந்து விடலாம் அது எமது செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அதற்கான ஆரம்பத்தை தாய் தமிழக
உறவுகள் ஏற்படுத்தி தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதில் உங்களின்
பங்கு கணிசமான அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
உறுப்பினர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய வேளையில்
அது இவ்வாறு அமைந்தது.ஈழத்து படைப்பாளியும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றிய செயலாளருமான பாலேந்திரன் பிரதீபன் ‘எங்களுடைய இனத்தை - சனத்தை எப்பொழுதும் தோற்கடிப்பது ஒற்றுமையீனம்தான்.
இதுதான் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்கின்றது. இன்று கட்சிகளுக்கு இடையில்
மட்டுமல்ல ஒற்றுமையின்மை காணப்படுகிறது.
ஒரு கட்சிக்குள்ளேயே தங்களை வளர்க்கவும் முன்னுக்கு கொண்டு வரவும்
அடிபட்டுக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்பொழுது இந்த
அரசியல்கட்சிகள்மீதும் அரசியல்வாதிகள்மீதும் நம்பிக்கை இழந்து போகிறோம். அரசியல்வாதிகள் மட்டும் தம்மை திருத்த வேண்டுமென்றில்லை. ஒவ்வொரு ஈழத்
தமிழரும் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒற்றுமைப்பட்ட பழைய
மாணவர்சமுகத்தில் என்னுடைய பங்கும் பணியும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும்.
எம்முடைய இனத்தின் விடுதலைப் பணியே அதன் இலக்காக இருக்க வேண்டும்.
சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் இயங்குவதுடன் தமிழ் தேசிய
அரசியல்வாதிகளையும் திருத்தி எம் விடுதலைப் பயணத்தை செம்மையாக்கி நம் கனவை வெல்லும் செயற்பாட்டிற்கு நான் தயாராக இருக்கிறேன் ’ என்றார். முன்னாள் யாழ் பல்களை மாணவர் ஒன்றிய தலைவர் சு. தவபாலசிங்கம்‘ இந்த தேசத்துக்காக நாங்கள் இழந்தவை ஏராளம் எண்ணற்ற எம் சொந்தங்கள்
முகவரி இல்லாமல் கூட அழிக்கப்பட்டுள்ளர்கள் .இப்போதுள்ள பூகோள அரசியல்
நிலையில் தமிழர் பிரச்சனை சர்வதேச ரீதியில் முக்கிய பேசு பொருளாக இருக்கும்
சூழலில் தமிழ் மக்களை வழி நடாத்தி செல்ல எந்த ஒருசரியான அரசியல் தலைமையும்
இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.ஈழத்தில் உருவாக்க பட்ட சிவில்
கட்டமைப்புக்களும் சரியான செயற்திறன் இல்லாமல் முடங்கிப்போயுள்ளது.இத்தகைய நிலையில் தனித்து குரல்
கொடுப்பதை விட்டு இப்போதுள்ள காலக்கனதியை புரிந்து கொண்டு முன்னாள்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் ஒன்றிணைந்து இந்த
பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் எங்கள் பாதைகள் நேரானதாகவும் தேச
விடுதலை நோக்கியதாகவும் அமைய வேண்டும் அதற்கு என் பூரண ஒத்துழைப்பும்
இருக்கும் ’ என்றார். இவ்வாறு சிதைந்து கிடக்கும் தார்மீக கடமைசார் உணர்வை ஒருங்கிணைத்து,
உங்களால் இயன்றதை ஈழப்போராட்டத்திற்கு நீங்கள் வழங்கும் போது தமிழர்
போராட்டம் மேலும் வலுப்பெறும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.
இதனையே ஈழத்தாய் இன்று உங்களிடம் எதிர்பார்த்து நிக்கிறாள்.www.uyarvu.com

« PREV
NEXT »

No comments