ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி நேற்று இரவு சேன்னையில் எத்திராஜ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தீக்குளித்து மரணித்துள்ளார். இது வரை எத்தனையோ தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் தீயிட்டு தற்கொடை செய்து கொண்டிருக்கின்றனர். அதுவும் ஒரே பிரச்சினைக்காக - தமிழீழம் விடிய வேண்டும் என்பதற்காக. ஏனெனில் தமிழீழம் அனைத்துத் தமிழர்களின் தாயகமாக உள்ளது. தமிழகத்தில் எத்தனையோ போராட்ட வடிவங்களில் தமிழீழத்திற்காகப் போராடினாலும், சிலர் இவ்வாறு உணர்ச்சி மேலீட்டால் தன்னைத் தானே தீயிட்டு இறப்பைத் தழுவுகின்றனர். இது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல எனினும், இறந்தவர்ளுக்கு உரிய மதிப்பளிக்கிறோம். இனி எவரும் இவ்வாறு செய்யக் கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்.
கௌதமி என்ற ராசாத்தி ஈழப் போராட்டம் உச்சத்தை அடைந்து வருகையில் அதில் தன் பங்களிப்பாக தன் உயிரையே தந்துள்ளார். இது அவர் உணர்வைக் காட்டுகிறது எனினும், இளைஞர்கள், இளம்பெண்கள் இந்த வழிமுறையைக் கைவிட்டு, ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டு தமிழீழம் அடையும் வரை போராட வேண்டும்.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் ஈழதேசத்தின் வீர வணக்கம். Www. Eeladhesam.com
No comments
Post a Comment