Latest News

February 19, 2013

மனித உரிமை மீறல்கள்: இலங்கை அரசிடம் இந்தியா கடுமையாக அணுக வேண்டும் :ஜி. ராமகிருஷ்ணன்
by admin - 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பும், பின்பும் எடுக்க புகைப்படங்களை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொடூரமான கொலையே உதாரணமாகும். நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளது.

 இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும், அதற்கு துணைபோனவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்துள்ளது. ஆனாலும் விசாரணைக்கு இலங்கை அரசு தயாராக இல்லை.

இப்பிரச்னையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு கடுமையான நிர்பந்தம் கொடுக்கும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 


« PREV
NEXT »

No comments