Latest News

February 13, 2013

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
by admin - 0

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இன்றைய தினம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்தே இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்ணிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேஜெயந் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் தர்சானந் ஆகியோரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இரண்டாம் இணைப்பு
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் இன்றைய தினம் ஒரு மணியளவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளிற்கினங்கவே இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இன்றைய தினம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்தே இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்ணிலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜனமேஜெயந் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் தர்சானந் ஆகியோரே விடுதலை செய்யப்படவுள்ளனர்.


« PREV
NEXT »

No comments