Latest News

February 13, 2013

எல்லாமே சரவெடி தான்’- அதிரப்போகும் தலைவா!
by admin - 0

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தலைவா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியால், அடுத்த படமான தலைவா ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்படுகின்றது. ரசிகர் மன்ற கொடி, தேர்தலில் தலையீடு என அரசியல் பக்கமும் அவ்வப்போது தலையை காட்டும் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ‘தலைவா’ என பெயர் வைத்திருப்பதே ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் ‘தலைவா’ படத்தின் அனைத்து பாடல்களும் கம்போஸிங்க் செய்து முடிக்கப்பட்டுவிட்டது என்று தலைவா படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியதும் டுவிட்டரில் இயங்கும் விஜய் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷிடம் பாடல்களைப் பற்றிய தங்கள் கேள்விக் கனைகளை தொடுத்தனர்.


அப்போது ஒரு ரசிகர் ‘தலைவா பட பாடலகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டார். அந்த கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் “எல்லாமே சரவெடி தான்.......” என்று பதிலளித்திருக்கிறார். பொதுவாகவே விஜய் நடிக்கும் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடத்தில் பெரிய மாஸ் இருக்கும், அந்த விதத்தில் ஜி.வி.பிரகாஷின் பதில் அவர்களது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது. ”தலைவா படத்தில் ஐந்து பாடல்கள், இரண்டு தீம் மியூசிக் உட்பட மொத்தம் ஏழு பாடலகள் இடம்பெற்றுள்ளன” என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் இருக்கும் ‘தலைவா’ படத்தைவிட பூஜை கூட துவங்கப்படாத ‘ஜில்லா’ படத்தின் செய்திகள் தான் ஹாட் டாபிக்காக இருக்கின்றன. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஜில்லா படத்தை இயக்குனர் நேசன் இயக்குகிறாராம். விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். கும்கி படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்த டி.இம்மான் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் நட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் பல பிரச்சனைகளைத் தாண்டி வெற்றிகரமாக துப்பாக்கி படத்தை ரிலீஸ் செய்த ஜெமினி ஃபிலிம் சர்கியூட் ஜில்லா படத்தின் உரிமையை கேட்டு ஆர்.பி.சௌத்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதாம். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை பற்றிய செய்திகள் சூடாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது விஜய்யின் 'HOT & SPICY GIRLFRIEND'-ஆன காஜல் அகர்வால் இந்த படத்தில் மறுபடியும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.

« PREV
NEXT »

No comments