Latest News

January 03, 2013

ஸ்டாலின்தான்... சொல்லி விட்டார் கருணாநிதி, என்ன செய்யப் போகிறார் அழகிரி?
by admin - 0

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை மீண்டும் ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். திமுகவில் அடுத்த தலைவர் யார் என்ற பட்டிமன்றமெல்லாம் இனி நடத்தத் தேவையில்லை என்பதாகவே கருணாநிதியின் பேச்சு அமைந்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியே தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார். அண்ணா மறைவைத் தொடர்ந்து திமுகவில் சக்திவாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு 1990களில் வைகோ சக்தி வாய்ந்த தலைவராக உருவானார். ஆனால் அவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவுக்குப் பிறகு திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என்ற நிலைமை உருவானது. ஆனால் மதுரையை மையமாகக் கொண்டு செல்வாக்கு செலுத்தி வந்த கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரியோ, அண்ணன் நானிருக்க தம்பிக்க முடிசூட்டுவதா? என கொந்தளித்தார். இதனால் திமுக இப்போது மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி அணியாக பிரிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மு.க.ஸ்டாலினின் எந்த ஒரு நிகழ்ச்சிக்குமே அழகிரி ஆதரவாளர்கள் போவதில்லை. இதற்கான கட்டப்பஞ்சாயத்து அவ்வப்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் வருகிறது. இந்த நிலையில் கருணாநிதி தமக்குப் பிறகு ஸ்டாலினே என்று மீண்டும அறிவித்திருக்கிறார்.



« PREV
NEXT »

No comments