Latest News

December 10, 2012

ஆசிட் வீச்சில் பார்வையிழந்த இழந்த பெண்ணுக்கு உதவி தேவை
by admin - 1

காதலிக்க
மறுத்த காரணத்தால்
ஆசிட் வீச்சுக்கு ஆளாகி பார்வை இழந்த பெண்
எஞ்சினியர் மருத்துவ
செலவுக்கு வழியின்றி தவிக்கிறார்.
அவருக்கு உதவி செய்து உயிரை காப்பாற்ற
உதவுமாறு உறவினர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்காலை சேர்ந்தவர் வினோதினி.
சாப்ட்வேர் என்ஜினீயர் படித்துள்ள இவர்
சைதாப்பேட்டையில் தங்கி இருந்து கம்ப்யூட்டர்
நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காரைக்காலைச் சேர்ந்த கட்டிடத்
தொழிலாளி சுரேஷ்
வினோதினியை ஒருதலைப் பட்சமாக
காதலித்துள்ளார். தனது காதலை ஏற்க மறுத்த
காரணத்தால் தீபாவளிக்கு ஊருக்கு வந்த
வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல
பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம்
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி.
நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால்
வினோதினியின் இரு கண்களும்
எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள
சதையை வெட்டி எடுத்து முகத்தில்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும்
சதையால் தைத்து மூடி உள்ளனர்.
வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக
செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது. வினோதினியின் தந்தை ஜெயபாலன்
செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். உயர்
சிகிச்சை அளிக்கப்படுவதால் மகளின் மருத்துவ
செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள்
தவித்து வருகின்றனர். கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான
நிலையில் வாழப்போராடிக்கொண்டிருக்கும்
இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம்
நீட்டும்படி பொதுமக்களுக்கு கீழ்பாக்கம்
மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். வினோதினிக்கு உதவி செய்ய விரும்புவோர்
அவரின் தந்தை வங்கி கணக்கில் தங்கள்
உதவியினை அனுப்பி வைக்கலாம்: JAYAPALAN a/c number 603899558, INDIAN
BANK, Kilpauk branch, Chennai, IFCS CODE:
IDIB000k037
« PREV
NEXT »

1 comment

Unknown said...

அவன் செய்த பாவத்துக்கு அதே தண்டனை கொடுக்கவேண்டும் . அப்போது தான் இந்த மாதிரியான செயல்கள் இனி நடக்காமல் தடுக்க முடியும், ஒரு பெண்ணை வளர்த்து படிக்க வைப்பது எவளவு கஷ்டம் இனி அந்த பெண்ணின் நிலை என்ன? இதற்கு முடிவு மக்கள் கையில்.