Latest News

December 10, 2012

இணையதளம் சரியாக உள்ளதா?
by admin - 0

சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும். இன்டர்நெட் ஸ்பீட் சரியாக இல்லையோ என்ற எண்ணத்திலும், நாம் ஆசை ஆசையாகப் பார்க்க வேண்டிய தளப் பற்று காரணமாகவும், இணைய இணைப்பினைத் துண்டித்து, பின் மீண்டும் இணைத்து, அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிப்போம். அப்போது அதே பிழைச் செய்தி வரலாம். இப்போது என்ன பிரச்னை? பிரவுசரிலா? அப்படி என்றால், மற்ற தளங்களைப் பெற்றுக் காட்டுவதிலும் சிக்கல் இருக்க வேண்டுமே? இல்லையே!
ஒருவேளை அந்த தளத்தில் பிரச்னை இருக்குமா? அதனை எப்படி அறிவது? இதற்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தில், ஓர் இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட இணைய தளம் சிக்கலில் இருப்பதால், கிடைக்கப்பெறாமல் உள்ளதா? அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கிறதா? என இந்த தளம் காட்டும். http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்றால், நமக்கு தள முகவரிக்கான கட்டம் ஒன்று காட்டப்படும். மாறா நிலையில் அதில், google.com காட்டப்படும். அந்தக் கட்டம் சென்று, நீங்கள் சோதனை செய்திட விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்திட வேண்டும். உடனேயே அந்த தளம் up இல் இருக்கிறதா அல்லது downஇல் இருக்கிறதா என நமக்குத் தகவல் காட்டப்படும். தளம் சரியாக இல்லை எனில் “It’s not just you! (Site’s Name Here) looks down from here!” என செய்தி கிடைக்கும். தளம் சரியாக இருப்பின், It’s just you. (Site’s Name Here) is up.” எனச் செய்தி கிடைக்கும்.



« PREV
NEXT »

No comments