Latest News

December 27, 2012

ஜெயலலிதாவை அவமதித்திருந்தால் கண்டிக்கத்தக்கது: கலைஞர்
by admin - 0

தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழக முதமைச்சர், அங்கே பேசுவதற்கு போதுமான நேரம் தரப்படவில்லை என்றும், தமிழக அரசை அவமானப்படுத்தி விட்டதாகவும் குறை கூறி வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?

அவமானப்படுத்தியிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். ஆனால் நடந்தது என்ன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நான் பல முதலமைச்சர்கள் மாநாடுகளுக்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன்.


குறிப்பாக அந்தக் கூட்டங்களில் முதலமைச்சர்கள் தங்களுடைய பேச்சுக்களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்படித் தான் முதலமைச்சர்கள் மாநாட்டில் பழக்கம்.

நானும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து அந்தப் பழக்கத்தை டெல்லியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார். முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எல்லா முதல் அமைச்சர்களுக்கும் பத்து நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நிமிடம் முடிந்த பிறகு இதுபோன்ற கூட்டங்களில் பேசும்போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சினை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது. அதற்கு மேல் ஐந்து நிமிடம் இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடம் கூட முதலமைச்சர்கள் பேசுவது உண்டு. நானும் அப்படிப் பேசியிருக்கிறேன். நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சினையும் அளித்து விடலாம். இது தான் நடைமுறை.



« PREV
NEXT »

No comments