Latest News

December 27, 2012

சேறும் சகதியுமாக நீரூறி மக்கள் குளிருக்குள் விறைத்தபடி இருக்கும் வன்னி கிராமங்கள்
by admin - 0


வன்னியில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வீடுகள் சேறும் சகதியுமாக நீரூறி மக்கள் குளிருக்குள் விறைத்தபடி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இரணைமடுக்குளம், கிளிநொச்சி குளம், கனகாம்பிகைகுளம், புதுமுறிப்புக்குளம், அக்கராயன்குளம் உட்பட முக்கிய குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன.

பல வீதிகளில் திருத்தப்படாத சீரற்ற பாலங்கள் ஏராளம் காணப்படுவதால் பாதுகாப்பற்ற போக்குவரத்து இடம்பெறுவதுடன், பல பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அல்லது தடைசெய்யப்பட்ட சூழல் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவு வெள்ளம் காரணமாக ஏனைய பகுதிளுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பெரும்பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


« PREV
NEXT »

No comments