Latest News

November 09, 2012

தளபதி பரிதி இன்று பிற்பகல் பிரான்சு நாட்டுத் தலைநகர் பரிசில் வீரச்சாவு
by admin - 0

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான திரு பரிதி அவர்கள்
சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்
திரு பரிதி மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர் என்றும் இவர் மீது 3
குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திரு பருதி அவர்கள் கடந்த வருடமும் இதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியில் செல்லும் போது சிங்கள கைக்கூலிகளால்
கொலைசெய்யும் நோக்குடன் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியிருந்தார். இதே போன்றே இந்த வருடமும் மாவீரர்நாள் நெருங்கிவருகின்ற சமயத்தில் இவர்
மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. திரு பரிதி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments