Latest News

November 09, 2012

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கலகம்; பலர் உயிரிழப்பு, 13 பேர் காயம்
by admin - 0

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கலவரம் ஆகியதில் 22 பேர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் படுகாயமடைதுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் கோபமுற்ற கைதிகள் குறித்த படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு அது பின்னர் கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டது. சிறைச்சாலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர் எனனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்போது, பிரதிப் பொலிஸ்மா அதிபரான ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவன படுகாயம் அடைந்து கெழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments