Latest News

November 10, 2012

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
by admin - 0

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள்.
உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு.
அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர
விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர்,
தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக்
கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில்
இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர்,
உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை.
அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர்
தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!
« PREV
NEXT »

No comments