Latest News

November 07, 2012

இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட ஜெயலலிதா பிரதமர் ஆக தகுதியானவர்-பிரான்ஸ்
by admin - 0

இந்தியாவில் பிரதமர் பதவி ஏற்று நாட்டைத் திறம்பட நடத்துவதற்குத்
தகுதியான நபர் ஜெயலலிதா என்று பிரான்ஸ் நாட்டின் யூரோப் கிரியேடிவ்
என்ற இணையதளப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அந்த இணையப் பத்திரிகையில்
ஒரு செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையில்,
இந்தியாவில் இந்திராவுக்குப் பிறகு நாட்டின் பெண் பிரதமராகத்
தலைமை ஏற்கத் தகுதியுள்ள நபர் ஜெயலலிதா, நிர்வாகத் திறன் மிக்க
அவரை அதனால்தான் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
ஹிலாரி கிளிண்டன் சந்தித்துப் பேசிச் சென்றார். இந்தியாவில் தமிழகத்தில்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல்
நிலவுகிறது, இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டில், சட்டமன்றத்தில்
தீர்மானம் போட்டு தனது உறுதித் தன்மையை அவர் நிரூபித்தார் என்றெல்லாம்
புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments