Latest News

November 08, 2012

மகாசேன் தாக்குதல் வருமா?
by admin - 0

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த
தாழ்வு நிலை மீண்டும் உருவாகியுள்ளது. வங்கக் கடலில் கடந்த மாதம் உருவான
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்து புயலாக மாறி சோமாலியா கடற்கரையை கடந்தது. இதன்போது இலங்கை,இந்திய கரையோரப்பிரதேசங்களில் கடும் காற்று வீசியதுடன் பலத்த
மழையும் பெய்தது. வங்கக் கடலில் அந்தமான் தீவு அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நிலம்
புயலாக மாறி கடந்த 31ஆம் திகதி மகாபலிபுரம் வழியாக கரையை கடந்து ஆந்திரா சென்றது. தற்போது மீண்டும் தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்த
தாழ்வு நிலை நேற்று உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் வடபாகம் உட்பட தமிழகத்தின் பல
இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடைந்தால்
தீபாவளி சமயத்தில் புயலாக மாறவும், மிக கனத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு எனவும்
அது எச்சரித்துள்ளது. அடுத்த புயல் ஏற்பட்டால் அதற்கு “மகாசேன்” என்று பெயர் சூட்டப்படும். இந்தப்
பெயரை சூட்டிய நாடு இலங்கை.
« PREV
NEXT »

No comments