மனித உரிமைகள் பேரவைக்
கூட்டத்தில், இலங்கைத்
தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என பாமக
தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில்
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான
மீளாய்வுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அக்கூட்டத்தில் பங்கேற்க ஐ.நா.வின்
சிறப்பு ஆலோசனைக் குழுவால்
அங்கீகரிக்கப்பட்டிருந்த பசுமைத் தாயகம் அமைப்புக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவ்வழைப்பின் பேரில் பாமக தலைவர்
ஜி.கே.மணியும், பசுமை தாயகம் அமைப்பின்
தலைவர் அருளும் விசாரணைக் கூட்டத்தில்
பங்கேற்றனர். ஜி.கே.மணி ஐ.நா கூட்டத்தொடரில்
உரையாற்றிய
போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக
பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் போரில் ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடப்பதை அந்த நாட்டின்
உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. இன அழிப்பாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ்
இனத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன்
இலங்கை அரசு செயற்பட்டு வருகிறது.
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள்
அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களில்
குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை இனப்
பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு. உலகம்
முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஐ.நா.
மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும் என்று அவர் உரையாற்றியதாக
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment