Latest News

November 03, 2012

நானு ஓயாவில் மீட்கப்பட்ட சடலம் செல்வம் அடைக்கலநாதனின் உறவினரது
by admin - 0

அண்மையில்
நானுஓயா பிரதேசத்தில்
மீட்கப்பட்ட சடலம்
நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்
நானுஓயா பிரதேசத்தில் இனந்தெரியாத
சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சடலமானது அண்மையில்
கொழும்பு செட்டியார் தெருவில் காணாமல்
போன சின்னத்துரை இந்திரேஸ்வரன்
என்பவரது சடலம் என தற்போது அடையாளம்
காணப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலம்
நுவரெலியா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை செல்வம்
அடைக்கலநாதன் அடையாளம் கண்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்ட 53 வயதான
இந்திரேஸ்வரன், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதனின் சகோதரியின்
கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30ம் திகதி இந்திரேஸ்வரன் காணாமல்
போயுள்ளார். 31ம் திகதி நானுஓயா பிரதேசத்தில்
இனந்தெரியாத சடலம் மீட்கப்பட்டதாக
பொலிஸார் அறிவித்திருந்தனர். இந்திரேஸ்வரன் நகை வியாபரத்தில்
ஈடுபட்டு வந்தார் எனவும், காணாமல் போன
சந்தர்ப்பத்தில் சுமார் 30 லட்ச ரூபா பணம்
வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன 30ம் திகதி இரவு 7
மணி வரையில் இந்திரேஸ்வரனின் செல்லிடப்
பேசி இயங்கியதாகவும் அதன் பின்னர்
தொடர்புகொள்ள முடியவில்லை எனவும்
குறிப்பிடப்படுகிறது.
« PREV
NEXT »

No comments