Latest News

November 03, 2012

குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட மாத்திரத்தில் பிரதம நீதியரசரை பணி நீக்க முடியாது!– ரணில்
by admin - 0

குற்றவியல்
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட
மாத்திரத்தில் பிரதம
நீதியரசரை பணி நீக்கம் செய்ய
முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்
தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஓர்
நீதிமன்றக் கட்டமைப்பை ஒத்திருக்கும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில்
பங்கேற்று கட்சியின்
நிலைப்பாட்டை வெளிப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசாங்கம் காலத்திற்கு காலம்
பல்வேறு மாறுபட்ட
கருத்துக்களை முன்வைத்து, மக்கள்
பிரச்சினைகளை திசைதிருப்ப
முயற்சிக்கின்றது. வாழ்க்கைச்
செலவு உயர்வு பிரச்சினையை திசை திருப்பும்
நோக்கிலேயே 13ம் திருத்தச் சட்டம்
தொடர்பான பிரச்சாரங்கள் வலுப்பெற்றுள்ளன. 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுவதனால்
பொருட்கள் சேவைகளுக்கான
விலையை குறைக்க முடியாது என ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட
போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments