இலங்கைக்குள் தமிழீழத்தை உருவாக்குதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு கோரும் யோசனையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனிடம் தனது மகன் ஸ்டாலின் வழங்குவார் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக 9 யோசனைகள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த யோசனைகளும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment