Latest News

October 04, 2012

3 வது உலகப் போர் ஆரம்பம் உலகம் அழியுமா?! மோதல் ஆரம்பம் !
by admin - 0

மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதா என்ற நிலைக்கு, இன்று உலகம் தள்ளப்பட்டுள்ளது. சிரியாவில் பல மாதங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், இன்று அயல் நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியைப் போல, தற்போது சிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆயுததாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மறைமுகமாகச் செய்து வருகின்றது. இந் நிலையில் சிரியாவின் எல்லையில் உள்ள துருக்கி மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது.

சிரிய இராணுவத்தினர் துருக்கி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 1 பெண் இறந்ததோடு , துருக்கிப் பொலிசார் ஒருவரும் காயமடைந்தார். இதனை அடுத்து துருக்கி இராணுவத்தினர் சற்று நேரத்துக்கு முன்னர் சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிரியா - துருக்கி எல்லையில் நிலைகொண்டுள்ள சிரிய இராணுவத்தினரைச் சமாளிக்க, மேலதிகமாகப் பல இராணுவத்தை துருக்கி அவ்விடத்தில் குவித்துள்ளது. இதனை அடுத்து பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இந் நிலை தொடர்பாக ஆராய, அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவுக்கு ஆதரவாக, சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், சிரியாவுக்கு எதிராக துருக்கி போரில் இறங்கும் பட்சத்தில் துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் என நம்பப்படுகிறது. இதனால் பாரிய போர் மூழும் ஆபாயம் காணப்படுவதாகவும், இந் நிலையை உடனடியாக தவிர்க்கவே, பல பன்நாட்டு அமைச்சர்கள் அவசர சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகவும் மேலும் அறியப்படுகிறது. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரை அமெரிக்காவே மறைமுகமாக வழிநடத்துவதாக சிரியாவின் அதிபர் கடுமையாகச் சாடியுள்ளார். இருப்பினும் அமெரிக்க இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.



« PREV
NEXT »

No comments