Latest News

October 31, 2012

தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் : இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து
by admin - 0

தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்தது. அதில் நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ள இருந்தார்கள். இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினார்கள். இதற்கிடையில், அமெரிக்காவில் சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த
பயணத்தை அவர் ரத்து செய்து விட்டார்.
« PREV
NEXT »

No comments