மாயமாக மறைந்து திருமண
தம்பதிகளை ஆசீர்வதிக்க வந்த
பெண்ணொருவர்
மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிய தமிழ்
திரைப்பட பாணி திருமணமொன்று யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்றுள்ளது. இத்திருமண வைபவம் நேற்று முற்பகல் 11
மணியளவில்
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன்
ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த
பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும்
திருமண வைபவத்தை நடத்தி வைப்பதற்காக
செல்வச் சந்நிதி முருகன்
ஆலயத்திற்கு உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர். திருமணத்திற்கென மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் ஆலய முன்றலுக்கு அழைத்துவர
தீர்மானித்தபோது மணப்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். மணப்பெண்ணை ஆலயத்தை சுற்றி உறவினர்கள் வலைவீசித் தேடியுள்ளனர். எனினும்
அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணம் செய்து வைக்க சுப முகூர்த்தம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்
உறவினர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். இதன்போதே திருமணத்திற்கு வந்திருந்த மாப்பிள்ளையின் முறை பெண்ணொருவர்
மணப்பெண்ணாக வேண்டுமென
யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டதை அடுத்து அப்பெண்ணிடம் சம்மதம் கேட்கப்பட்டது. அப்பெண்ணும் திருமணத்திற்கு சம்மதித்ததால் அவ்விருவருக்கும் திருமணம்
செய்து வைக்கப்பட்டது.
No comments
Post a Comment