ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக
இன்னும் சில
மணித்தியாலயங்களில்
முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளை புயல்
தாக்கும் என வானிலை அவதான நிலையம்
தெரிவித்துள்ளது. தற்போது முல்லைத்தீவுக்கு வெளியே 200
கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள
இத் தாழமுக்கம் புயலாக
மாறி தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்
இது இன்று மாலை யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களை தாக்கும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்புயலானது மணிக்கு 60 முதல் 80
வரையான வேகத்தில் இப்பகுதிகளை தாக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை ஏற்பட்ட
கடும்காற்று காரணமாக
கடற்றொழிலாளர்களின் படகுகள் சில
சேதமடைந்தள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.மாவட்டத்தில் உள்ள
கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல
வேண்டாம் என வானிலை அவதான நிலையம்
கேட்டுக்கொண்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள
யாழ். அலுவலகமும்
கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல
வேண்டாம் என அறிவித்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் முழுவதிலும்
கடுமையான இருளில்
மூழ்கியுள்ளதோடு வடமராட்சி மற்றும்
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடும்
காற்றும் வீசி வருகின்றது. இதேவேளை சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம்
காரணமாக வட பகுதியின்
கரையோரங்களிலுள்ள மக்கள்
இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment